அரக்க பறக்க
ஓடி ஓடி...
தமிழ் தாய் வாழ்த்தை
கேட்டிலே நின்று பாட..
மீண்டும் ஒரு நாள் கிடைக்காதா...
வரிசையில்...
முட்டி மோதியதர்க்காக
வசை வாங்கி
பல்லிளிக்க,,,
மீண்டும் ஒரு நாள் கிடைக்காதா...
வீட்டுப்பாடம் மறந்து....
வீட்டிலே விட்டு விட்டு
வீங்க வீங்க அடி வாங்கி
கதவோரம் நின்றே
கணிதம் படிக்க
மீண்டும் ஒரு நாள் கிடைக்காதா...
முதல் மாணவனாக
பேர் வாங்க வேண்டும்
அதிக முறை பேசியதற்காக...
ஓயாமல் பேசி
உருப்படாதவன் என பட்டம் வாங்க....
மீண்டும் ஒரு நாள் கிடைக்காதா...
தடுப்பூசியை தவிர்க்க...
வரிசையின்
வாலுக்கு நகர்ந்து...
ஒவ்வொரு ஊசிக்கும்
இறுக்கி கண் மூட...
மீண்டும் ஒரு நாள் கிடைக்காதா...
ஜுராசிக் பார்க் படம் பார்க்க...
முட்டாய் காசை
சேர்த்து வைத்து...
ரயில் வண்டிபோல்
ஊர் பார்க்க ஊர்வலம் போய்..
அரண்டு மிரள....
மீண்டும் ஒரு நாள் கிடைக்காதா...
அக்காவின் கல்யாணத்துக்கும்
as i am suffering from
my sisters marriageனு எழுதி...
வகுப்பே சிரிக்க
லீவு கேட்க...
மீண்டும் ஒரு நாள் கிடைக்காதா...
பரீட்சையின் முதல் நாள் வந்த
உறவுக்கார காய்ச்சல்...
பேப்பர் கொடுக்கும் நாள்
உண்மையில் வர...
மீண்டும் ஒரு நாள் கிடைக்காதா...
பெயிலாப்போன..
ப்ரோக்ரஸ் கார்டை
டிவி மேல் வைத்து விட்டு...
கதவுக்கு பின் ஒழிந்து
நிலவரம் அறிய..
மீண்டும் ஒரு நாள் கிடைக்காதா...
முன் பின் தெரியாத
வேறு வகுப்பு மாணவன்..
முழுவாண்டு தேர்வில்...
முக்கியமான பேப்பர் தந்து..
திடீர் தெய்வமாக வணங்க..
மீண்டும் ஒரு நாள் கிடைக்காதா...
செய்த தவறேல்லாம் மறந்து...
எந்த முயற்ச்சியும் செய்யாமல்...
வந்த 230 மார்க்குக்கு...
ஒரு சாமி விடாமல்
நன்றி மேல் நன்றி சொல்ல...
மீண்டும் ஒரு நாள் கிடைக்காதா...
புத்தம் புது உறுதிமொழிகளோடு...
புது புக்குக்கு...
அட்டை போட்டு..
ஸ்டிக்கர் ஒட்டி...
பிழையோடு பேரெழுதி...
குதூகலமாய் கூட்டாளியோடு...
பள்ளிக்கு செல்ல...
மீண்டும் ஒரு நாள் கிடைக்காதா..