Friday, July 30, 2010

பாரதி

தேடிச் சோறு நிதம் தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையனப்பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?
--------------பாரதி-----------------

Thursday, July 8, 2010

கத்தரி மழை


வெயிலடித்து மழை ஓய்ந்த அந்நேரம்
குடை பிடித்து நனைந்து போன அந்தி நேரம்
உன் நனைந்த பூவின் மனமும்
ஒரு குடை நிழலும்
தொடாமல் தொட்ட நினைவும்
என்றும் என் நினைவில் உள்ளதடி
தினமும் என்கனவை கொல்லுதடி
.....................ஜெய்............

அம்மு


ரோஜா என்று நினைத்து இருந்தேன்
விரிந்த பொழுது தான் தெரிந்தது என்னவளின் இதழ்கள் என்று!!!!!!!
.....................ஜெய்............

Wednesday, July 7, 2010

இனியவை நாற்பது

கணியன் பூங்குன்றனார் என்பவர் இயற்றிய நூல் இனியவை நாற்பது. இது நாற்பது வெண்பாக்களினால் ஆனது. பண்டைக்காலத் தமிழ்நூல் தொகுப்புக்களில் ஒன்றான பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் இதுவும் ஒன்று. உலகில் நல்ல அல்லது இனிமையான விடயங்களை எடுத்துக்கூறுவதன் மூலம் மக்களுக்கு நீதி புகட்டுவதே இந்நூலின் நோக்கம். ஒவ்வொரு பாடலும் மூன்று நல்ல விடயங்களை எடுத்துக் கூறுகின்றது.

ஜன்னலோர சாரல்கள்...



இமை கொட்டாமல்,
இறுகிய கம்பிகளின் வெளிப்பக்கத்தில்,
இப்படி தினமும் மூழ்கிப்போகிறாள்...

தெருவில் குட்டியோடு கொஞ்சிடும் நாயிடம்,
தெரியவந்தது- தாய்ப்பாசம்.

மர நிழலில் த்ள்ளுவண்டியோடு,
மகனின் சட்டை பொத்தானை
மணி நேரமாய் சரிசெய்த,
அப்பாவிடம் தெரிந்தது- அக்கறை.

இப்படி எவ்வளவோ இருந்தும்,
மனமார்ந்த பாராட்டை
மின்சார வாரியம் தட்டிச்சென்றது...

இரண்டு மணி நேரம் மூச்சடிக்கி,
இயற்க்கை சினிமாத்தனத்தை
இவளுக்காக ஜன்னல் திரையில் கொடுத்ததுக்காக...

ஐந்து மணி ஆகிய ஆத்திரத்தில்,
அவசரமாய்
அம்மாவின் அதே
அழைப்புமணி தொலைபேசியில்,
"கரண்ட் வந்ததும்,
கேபிள் போட்டு,
கார்ட்டூன் பாத்துகோ"

செம்மொழி திருவிழா...



செம்மொழி கண்ட என் தாய் மொழிக்கு..
கொங்கு மண்ணிலே புகழாரம்..!
அகம்.. புறம்.. தொகுத்த
என் அன்னை தமிழுக்கு
கோவை நகரிலே கொண்டாட்டம்..!

சிலர் பெருமைக்கு உரிய
விழா என்றும்..
சில கட்சிகள் நடத்தும்
கூட்டம் என்றும்..
ஆயிரம் கூற்றுகள் இருந்தாலும்
என் உலக தமிழின் புகழ் சேர்க்க
கூடிடும் கூட்டம் இதுவென்றோ..!


வாழிய தமிழ் மொழி..!
வாழிய தமிழ் செம்மொழி...!