நான் காதலிக்கவும் இல்லை
காதலிக்க படவும் இல்லை
ஆனால் காதல் உண்டு
வெண்மையான உலகம்
மஞ்சள் வெயில்
என்றும் அந்தி நேரம்
மல்லிகை மனம்
புதிதாய் வாங்கிய பொருள் கைக்கு சேர இருக்கும் கணத்தின் ஆவல்
உடல் முழுவதும் பிறந்த குழந்தை போல மென்மை
பரக்க துடிக்கும் இதயம்
முகம் முழுவதும் மௌனம்
மூளை முழுவதும் கொழப்பம்
கண்ணாடியில் அழகான முகம்
கவிதையில் வெறுமை
நிமிடங்களின் இழுபறி
இத்தனையும் இருப்பதால்
காதலி இல்லாமலே காதலில் வாழ்கிறேன் ..