நீ கடைசியாய் உச்சரித்து அது மட்டுமே!!!
நினைவுகள் மட்டுமே அருகில்
சேர்ந்திருந்த நேரங்கள் தொலைவில் !!
உன் இமைகள் படபடத்ததும்
இதயம் பதைபதைத்ததும்
இதழ்கள் எதோ சொல்ல எத்தனித்தும்
எப்போதும் என் இதயத்தில் பொக்கிசமாய்!!
நீ இறுதியாய் பேசிய வார்த்தைகள் முற்று பெற வில்லை ??
உன் முனுமுனுப்பு இன்றும் ஒலித்து கொண்டிருக்கிறது
வழக்கம்போல் மௌனமாய் சிரித்து கொண்டேதான் கிளம்பினேன்
ஆனால் உண்மையில் வலிக்கிறது எனக்கு !!
----------------- ஜெய் --------------
No comments:
Post a Comment