Monday, December 12, 2011

பிரிவு !!



மௌனம் மட்டுமே சத்தமாய் கேட்கிறது 
நீ கடைசியாய் உச்சரித்து அது மட்டுமே!!!
நினைவுகள் மட்டுமே அருகில் 
சேர்ந்திருந்த நேரங்கள் தொலைவில் !!
உன் இமைகள் படபடத்ததும் 
இதயம்  பதைபதைத்ததும் 
இதழ்கள் எதோ சொல்ல எத்தனித்தும் 
எப்போதும் என் இதயத்தில் பொக்கிசமாய்!! 
நீ இறுதியாய் பேசிய வார்த்தைகள் முற்று பெற வில்லை ??
உன் முனுமுனுப்பு இன்றும் ஒலித்து கொண்டிருக்கிறது 
வழக்கம்போல் மௌனமாய் சிரித்து கொண்டேதான் கிளம்பினேன் 
ஆனால் உண்மையில் வலிக்கிறது  எனக்கு !!
----------------- ஜெய் --------------

Monday, October 3, 2011

காதலி

நான் காதலிக்கவும்  இல்லை 
காதலிக்க  படவும்  இல்லை
ஆனால் காதல்  உண்டு 
வெண்மையான  உலகம் 
மஞ்சள்  வெயில் 
என்றும்  அந்தி  நேரம் 
மல்லிகை  மனம் 
புதிதாய்  வாங்கிய  பொருள்  கைக்கு  சேர  இருக்கும்  கணத்தின்  ஆவல் 
உடல்  முழுவதும்  பிறந்த  குழந்தை  போல  மென்மை
பரக்க  துடிக்கும்  இதயம் 
முகம்  முழுவதும்  மௌனம் 
மூளை  முழுவதும்  கொழப்பம்
கண்ணாடியில்  அழகான  முகம்
கவிதையில்  வெறுமை 
நிமிடங்களின்  இழுபறி 
இத்தனையும் இருப்பதால் 
காதலி  இல்லாமலே  காதலில்  வாழ்கிறேன் ..

Tuesday, August 9, 2011

............உயிர் பிரிந்தது ...........


கத்தி இல்லை ,
இரத்தம்  இல்லை ,
கதறல் இல்லை ,
காயம் கூட இல்லை,
கிழித்து விட்டால் என் இதயத்தை
வெறும் வார்த்தைகளால்...

Friday, June 3, 2011

காத்திருக்கிறேன் !!!

ஒரேமுறை  சொல்லி  விடு 
அது  ஒன்றும்  ரகசியம்  அல்ல 
சொல்ல  கூட  வேண்டாம்  என்னை  சொல்லால்  கொள்ளாமல்  இரு 
கல்வியோடு  செய்த  காதலை  விட 
கலங்கமில்லாதது இன்று !!
பார்த்துவிடு 
கண் எதிரே  இருந்து  கொண்டு  கண்மூட  சொல்லாதே 
காயங்கள்  செய்து  மறந்து  விடாதே 
மனம்  என்பது  மாருவதர்க்காகதான்  என்னை மாற்றிவிடாதே 
மௌனமாய்  என்னை  மறைத்து  விடாதே
மலையோட   மின்னலை  போல , ஏன்   தூக்கத்தில்  உளறலாய்  மட்டும்  இருந்து  விடாதே !!!
உனக்காகவே உறக்கத்தை கலைகிறேன் என்னை தொலைத்து விடாதே !!

இதயம்

இதயத்தை  இலவசமாய்  தர  நினைத்தேன் !!!
          இதயம்  இல்லாதவளாய்  நடந்து  கொண்டாள் !!!!

Sunday, April 24, 2011