வெற்றிகள் உன்னை உலகுக்கு அறிமுக படுத்தும்
தோல்விகள் உனக்கு உலகை அறிமுக படுத்தும் !!!!!
எனை பற்றி நான் எழுத நான் கண்ணதாசன் அல்ல எனை பற்றி பிறர் எழுத நான் ஏசுபிரான் அல்ல எனது இருபத்தி ஐந்து வருட கால பதிவுகளை மட்டும் பதிய விரும்பதியதால் இந்த இனியவை இருபத்தி ஐந்து கவிதை நடையில் நடனம் ஆகிறது........
Monday, September 20, 2010
பிறப்பால் அறிவோம்
பல வருடங்கள் வாழும் மனிதன் அழுது கொண்டே பிறக்கிறான்
சில நாட்கள் வாழும் பூக்கள் சிரித்து கொண்டே பூக்கிறது!!!!
மரணத்தின் வாயிலிலும் சிரிக்கும் பூக்கள்
பூக்கள் அல்ல நமக்கு வாழ்க்கையை கற்றுத் தரும் போதி மரம்!!!
மரணத்தின் வாயிலிலும் சிரிக்கும் பூக்கள்
பூக்கள் அல்ல நமக்கு வாழ்க்கையை கற்றுத் தரும் போதி மரம்!!!
Wednesday, September 15, 2010
கல்வெட்டு
உன் பெயரை கூட நான் எழுதுவதில்லை
ஏன் தெரியுமா ?????????
"பேனா முனை" உன்னை குத்துமென்று!!!!!!!
Friday, September 3, 2010
அருகில் நீ !!!
கைநீட்டி தொடும் தூரம்
நடந்தால் ஏனோ கால தாமதம் !!
குடைக்குள் மழை சிந்தும் மேகம்
கண்மூடி திறந்தால் காணோம் !!
மழைகூட வெயிலின் தாகம்
பனிமூடிய பருவ வேகம்
வீட்டுக்குள் உறங்கும் போதும்
நீ நனைந்தால் எந்தன் சாபம்!!
யாராரோ வந்தால் கூட
நீ இல்ல நேரம் பாரம்
உன் வாசம் வீசும் போது
ஏன் நெஞ்சில் ஈரம் ஈரம்!!!
நடந்தால் ஏனோ கால தாமதம் !!
குடைக்குள் மழை சிந்தும் மேகம்
கண்மூடி திறந்தால் காணோம் !!
மழைகூட வெயிலின் தாகம்
பனிமூடிய பருவ வேகம்
வீட்டுக்குள் உறங்கும் போதும்
நீ நனைந்தால் எந்தன் சாபம்!!
யாராரோ வந்தால் கூட
நீ இல்ல நேரம் பாரம்
உன் வாசம் வீசும் போது
ஏன் நெஞ்சில் ஈரம் ஈரம்!!!
தனிமை ஏது
உன்னையேச் சிந்திக்கிறேன்
உன்னைப் பற்றியே யோசிக்கிறேன்
உன்னைப் பார்க்காமல் பார்க்கிறேன்
உன்னோடு பேசுகிறேன் நீயில்லாமல்
உன்னோடு இருப்பதால்
தனிமை ஏது
உன்னைப் பற்றியே யோசிக்கிறேன்
உன்னைப் பார்க்காமல் பார்க்கிறேன்
உன்னோடு பேசுகிறேன் நீயில்லாமல்
உன்னோடு இருப்பதால்
தனிமை ஏது
Wednesday, September 1, 2010
இடைவேளைக்கு பின் செய்திகள்
காலை வணக்கம்
மதிய செய்தி
வயலும் வாழ்வும்
ஒலியும் ஒளியும்
சித்திர குப்தன்
விடாது கருப்பு
பைபிள் புக்
ஜன்கல் புக்
சந்திர காந்தா
சாந்தி
ராணி காமிக்ஸ் - மாயாவி
ஒரு ரூபா வாடகை சைக்கில்
ரங்கா ரீஸ் (செவென் ஸ்டோன்)
மாஞ்சா பட்டம், பனால் ,
பம்பரம் ,ஒளிஞ்சு விளையாட்டு
திருட்டு மாங்கா
முதல் காதல்
பதின் வயது
பாக்கெட் மணி
பஸ் பாஸ்
பத்தாவது பரீட்சை
கரைந்துபோன
பவித்திர காலத்தில்
ஒரு நிமிடமேனும் மீண்டும்
வாழ்ந்திடல் வேண்டும்.
மதிய செய்தி
வயலும் வாழ்வும்
ஒலியும் ஒளியும்
சித்திர குப்தன்
விடாது கருப்பு
பைபிள் புக்
ஜன்கல் புக்
சந்திர காந்தா
சாந்தி
ராணி காமிக்ஸ் - மாயாவி
ஒரு ரூபா வாடகை சைக்கில்
ரங்கா ரீஸ் (செவென் ஸ்டோன்)
மாஞ்சா பட்டம், பனால் ,
பம்பரம் ,ஒளிஞ்சு விளையாட்டு
திருட்டு மாங்கா
முதல் காதல்
பதின் வயது
பாக்கெட் மணி
பஸ் பாஸ்
பத்தாவது பரீட்சை
கரைந்துபோன
பவித்திர காலத்தில்
ஒரு நிமிடமேனும் மீண்டும்
வாழ்ந்திடல் வேண்டும்.
Subscribe to:
Posts (Atom)