Sunday, December 12, 2010

........நல்லாயன் உயர் நிலை பள்ளி....

அரக்க பறக்க
ஓடி ஓடி...
தமிழ் தாய் வாழ்த்தை
கேட்டிலே நின்று பாட..
மீண்டும் ஒரு நாள் கிடைக்காதா...

வரிசையில்...
முட்டி மோதியதர்க்காக
வசை வாங்கி
பல்லிளிக்க,,,
மீண்டும் ஒரு நாள் கிடைக்காதா...

வீட்டுப்பாடம் மறந்து....
வீட்டிலே விட்டு விட்டு
வீங்க வீங்க அடி வாங்கி
கதவோரம் நின்றே
கணிதம் படிக்க
மீண்டும் ஒரு நாள் கிடைக்காதா...

முதல் மாணவனாக
பேர் வாங்க வேண்டும்
அதிக முறை பேசியதற்காக...
ஓயாமல் பேசி
உருப்படாதவன் என பட்டம் வாங்க....
மீண்டும் ஒரு நாள் கிடைக்காதா...

தடுப்பூசியை தவிர்க்க...
வரிசையின்
வாலுக்கு நகர்ந்து...
ஒவ்வொரு ஊசிக்கும்
இறுக்கி கண் மூட...
மீண்டும் ஒரு நாள் கிடைக்காதா...

ஜுராசிக் பார்க் படம் பார்க்க...
முட்டாய் காசை
சேர்த்து வைத்து...
ரயில் வண்டிபோல்
ஊர் பார்க்க ஊர்வலம் போய்..
அரண்டு மிரள....
மீண்டும் ஒரு நாள் கிடைக்காதா...

அக்காவின் கல்யாணத்துக்கும்
as i am suffering from
my sisters marriageனு எழுதி...
வகுப்பே சிரிக்க
லீவு கேட்க...
மீண்டும் ஒரு நாள் கிடைக்காதா...

பரீட்சையின் முதல் நாள் வந்த
உறவுக்கார காய்ச்சல்...
பேப்பர் கொடுக்கும் நாள்
உண்மையில் வர...
மீண்டும் ஒரு நாள் கிடைக்காதா...

பெயிலாப்போன..
ப்ரோக்ரஸ் கார்டை
டிவி மேல் வைத்து விட்டு...
கதவுக்கு பின் ஒழிந்து
நிலவரம் அறிய..
மீண்டும் ஒரு நாள் கிடைக்காதா...

முன் பின் தெரியாத
வேறு வகுப்பு மாணவன்..
முழுவாண்டு தேர்வில்...
முக்கியமான பேப்பர் தந்து..
திடீர் தெய்வமாக வணங்க..
மீண்டும் ஒரு நாள் கிடைக்காதா...

செய்த தவறேல்லாம் மறந்து...
எந்த முயற்ச்சியும் செய்யாமல்...
வந்த 230 மார்க்குக்கு...
ஒரு சாமி விடாமல்
நன்றி மேல் நன்றி சொல்ல...
மீண்டும் ஒரு நாள் கிடைக்காதா...

புத்தம் புது உறுதிமொழிகளோடு...
புது புக்குக்கு...
அட்டை போட்டு..
ஸ்டிக்கர் ஒட்டி...
பிழையோடு பேரெழுதி...
குதூகலமாய் கூட்டாளியோடு...
பள்ளிக்கு செல்ல...
மீண்டும் ஒரு நாள் கிடைக்காதா..

Wednesday, October 27, 2010

kavitha

hai maanasa neevu peelche oopire naaku swaasa neevu palike matale naa basha, nee aalochanale naaku aasha, prathi kshanam nee paine naa dhyaasa, maanasaa kaadu idi na nasa, nee sneha parichayamtho naaku vochina praasa, anduke nee pai yi kavitha

Monday, October 18, 2010

------அறிந்தேன் அவளை------

யாருக்கும் தெரியாமல் அவளை காதலித்தேன்
அவளுக்கும் தெரியாமல் அவள் என்னை காதலித்தால்

Saturday, October 9, 2010

~~~முதல் காதல் தோல்வி ~~~

என் கதைகளை  யாரும்  கேட்பதில்லை!! கவிதைகளை  யாரும்  படிப்பதில்லை!!  
என் வார்த்தைகளை  யாரும்  மதிப்பதில்லை!! மௌனத்தை   யாரும்  முடிப்பதில்லை!!
ஏன்  என்  தனிமை   கோலங்கள்  கரைவதில்லை!!  கை  கோர்த்து  நடக்கவும்  ஆளில்லை !!
பயணங்களில்  நெடுந்தூரம்  கடக்கவில்லை!!  நடந்தும்  எதையும்  மறக்க  வில்லை!!
சூன்யம்~~  சூன்யம்~~  சூன்யம்~~
என்  தனிமை  வேதனை  காரணம்~~
வெற்றிடம்  உறைவிடம்   என்னிடம் !!
இறந்தும்  இருக்கிறேன்  உயிருடன்  ...............!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ஜெய்~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Monday, September 20, 2010

அறிமுகம்

வெற்றிகள் உன்னை உலகுக்கு அறிமுக படுத்தும்
தோல்விகள் உனக்கு உலகை அறிமுக படுத்தும் !!!!!

பிறப்பால் அறிவோம்

பல  வருடங்கள்  வாழும்  மனிதன்  அழுது கொண்டே  பிறக்கிறான் 
சில  நாட்கள்  வாழும்  பூக்கள்  சிரித்து கொண்டே பூக்கிறது!!!!
மரணத்தின் வாயிலிலும் சிரிக்கும் பூக்கள்
பூக்கள் அல்ல நமக்கு வாழ்க்கையை கற்றுத் தரும் போதி மரம்!!!

Wednesday, September 15, 2010

கல்வெட்டு

உன்  பெயரை  கூட  நான்  எழுதுவதில்லை 
ஏன்  தெரியுமா ?????????
"பேனா  முனை" உன்னை குத்துமென்று!!!!!!!

Friday, September 3, 2010

அருகில் நீ !!!

கைநீட்டி தொடும் தூரம்
நடந்தால் ஏனோ கால தாமதம் !!
குடைக்குள் மழை சிந்தும் மேகம்
கண்மூடி திறந்தால் காணோம் !!
மழைகூட வெயிலின் தாகம்
பனிமூடிய பருவ  வேகம்
வீட்டுக்குள் உறங்கும் போதும்
நீ நனைந்தால் எந்தன் சாபம்!!
யாராரோ வந்தால் கூட
நீ இல்ல நேரம் பாரம்
உன் வாசம் வீசும் போது
ஏன் நெஞ்சில் ஈரம்  ஈரம்!!!

தனிமை ஏது

உன்னையேச் சிந்திக்கிறேன்

உன்னைப் பற்றியே யோசிக்கிறேன்

உன்னைப் பார்க்காமல் பார்க்கிறேன்

உன்னோடு பேசுகிறேன் நீயில்லாமல்

உன்னோடு இருப்பதால்

தனிமை ஏது

Wednesday, September 1, 2010

இடைவேளைக்கு பின் செய்திகள்

காலை வணக்கம்
மதிய செய்தி
வயலும் வாழ்வும்
ஒலியும் ஒளியும்
சித்திர குப்தன்
விடாது கருப்பு
பைபிள் புக்
ஜன்கல் புக்
சந்திர காந்தா
சாந்தி
ராணி காமிக்ஸ் - மாயாவி
ஒரு ரூபா வாடகை சைக்கில்
ரங்கா ரீஸ் (செவென் ஸ்டோன்)
மாஞ்சா பட்டம், பனால் ,
பம்பரம் ,ஒளிஞ்சு விளையாட்டு
திருட்டு மாங்கா
முதல் காதல்
பதின் வயது
பாக்கெட் மணி
பஸ் பாஸ்
பத்தாவது பரீட்சை
கரைந்துபோன
பவித்திர காலத்தில்
ஒரு நிமிடமேனும் மீண்டும்
வாழ்ந்திடல் வேண்டும்.

Thursday, August 26, 2010

ஆழம்

ஆழம் அதிகமாக இல்லை இருந்தும் விழுந்து விட்டேன்
அவள் கன்னக்குழியில்

Sunday, August 1, 2010

உனக்காகவே நான்

நீ என்னை

பிரிந்து விட்டாய்

என்பது எனக்கு தெரியும்

பாவம் என் இதயத்துக்கு தெரியாது

அது உனக்காக இன்னும்

துடித்து கொண்டு இருக்கிறது

கண்மணி

பக்கம் பக்கமாய் பேச நினைக்கிறேன் …
ஆனால் உன்னிடம் பேசும் போது மட்டும் …
முந்தி கொள்கிறது …..
என் ” மௌனம் “
-------------ஜெய்---------------

Friday, July 30, 2010

பாரதி

தேடிச் சோறு நிதம் தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையனப்பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?
--------------பாரதி-----------------

Thursday, July 8, 2010

கத்தரி மழை


வெயிலடித்து மழை ஓய்ந்த அந்நேரம்
குடை பிடித்து நனைந்து போன அந்தி நேரம்
உன் நனைந்த பூவின் மனமும்
ஒரு குடை நிழலும்
தொடாமல் தொட்ட நினைவும்
என்றும் என் நினைவில் உள்ளதடி
தினமும் என்கனவை கொல்லுதடி
.....................ஜெய்............

அம்மு


ரோஜா என்று நினைத்து இருந்தேன்
விரிந்த பொழுது தான் தெரிந்தது என்னவளின் இதழ்கள் என்று!!!!!!!
.....................ஜெய்............

Wednesday, July 7, 2010

இனியவை நாற்பது

கணியன் பூங்குன்றனார் என்பவர் இயற்றிய நூல் இனியவை நாற்பது. இது நாற்பது வெண்பாக்களினால் ஆனது. பண்டைக்காலத் தமிழ்நூல் தொகுப்புக்களில் ஒன்றான பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் இதுவும் ஒன்று. உலகில் நல்ல அல்லது இனிமையான விடயங்களை எடுத்துக்கூறுவதன் மூலம் மக்களுக்கு நீதி புகட்டுவதே இந்நூலின் நோக்கம். ஒவ்வொரு பாடலும் மூன்று நல்ல விடயங்களை எடுத்துக் கூறுகின்றது.

ஜன்னலோர சாரல்கள்...



இமை கொட்டாமல்,
இறுகிய கம்பிகளின் வெளிப்பக்கத்தில்,
இப்படி தினமும் மூழ்கிப்போகிறாள்...

தெருவில் குட்டியோடு கொஞ்சிடும் நாயிடம்,
தெரியவந்தது- தாய்ப்பாசம்.

மர நிழலில் த்ள்ளுவண்டியோடு,
மகனின் சட்டை பொத்தானை
மணி நேரமாய் சரிசெய்த,
அப்பாவிடம் தெரிந்தது- அக்கறை.

இப்படி எவ்வளவோ இருந்தும்,
மனமார்ந்த பாராட்டை
மின்சார வாரியம் தட்டிச்சென்றது...

இரண்டு மணி நேரம் மூச்சடிக்கி,
இயற்க்கை சினிமாத்தனத்தை
இவளுக்காக ஜன்னல் திரையில் கொடுத்ததுக்காக...

ஐந்து மணி ஆகிய ஆத்திரத்தில்,
அவசரமாய்
அம்மாவின் அதே
அழைப்புமணி தொலைபேசியில்,
"கரண்ட் வந்ததும்,
கேபிள் போட்டு,
கார்ட்டூன் பாத்துகோ"

செம்மொழி திருவிழா...



செம்மொழி கண்ட என் தாய் மொழிக்கு..
கொங்கு மண்ணிலே புகழாரம்..!
அகம்.. புறம்.. தொகுத்த
என் அன்னை தமிழுக்கு
கோவை நகரிலே கொண்டாட்டம்..!

சிலர் பெருமைக்கு உரிய
விழா என்றும்..
சில கட்சிகள் நடத்தும்
கூட்டம் என்றும்..
ஆயிரம் கூற்றுகள் இருந்தாலும்
என் உலக தமிழின் புகழ் சேர்க்க
கூடிடும் கூட்டம் இதுவென்றோ..!


வாழிய தமிழ் மொழி..!
வாழிய தமிழ் செம்மொழி...!