கத்தி இல்லை ,
இரத்தம் இல்லை ,
கதறல் இல்லை ,
காயம் கூட இல்லை,
கிழித்து விட்டால் என் இதயத்தை
வெறும் வார்த்தைகளால்...
எனை பற்றி நான் எழுத நான் கண்ணதாசன் அல்ல எனை பற்றி பிறர் எழுத நான் ஏசுபிரான் அல்ல எனது இருபத்தி ஐந்து வருட கால பதிவுகளை மட்டும் பதிய விரும்பதியதால் இந்த இனியவை இருபத்தி ஐந்து கவிதை நடையில் நடனம் ஆகிறது........
நீ என்னை
பிரிந்து விட்டாய்
என்பது எனக்கு தெரியும்
பாவம் என் இதயத்துக்கு தெரியாது
அது உனக்காக இன்னும்
துடித்து கொண்டு இருக்கிறது
|
|
கோவில்களின் பிறப்பிடம்
நான்கு சுவற்றாலான -
மனசு!
உடல் சுட்டெரிக்கும் கோபம் காமம்
போட்டி பொறாமை வெற்றி தோல்வி
மகிழ்ச்சி கண்ணீர் -
அனைத்தும் சுமந்த மண் ஓவியம்!
முயற்சியும்
உழைப்பும்
குழைந்துக் கொண்ட சாதனை!
பண இருப்பை
உலகிற்குக் காட்டிக் கொள்ளும்
படோடாபம்!
நிறைய பேருக்கு
சுயமாக கிடைத்திடாத
வாழ்நாள் கனவு!
தெருவில் -
குடும்பம் நடத்துபவரை கண்டு
பல்லிளிக்கும் வண்ணக் குவியல்!
விட்டுச்சென்ற அம்மா
அப்பாவின் சப்தங்கள் நிறைந்த
நினைவுக் கூடு!
நான் தத்தி நடந்த
வளர்ந்த - அழுது அடம் பிடித்த
வாழ்ந்த மொத்தத்தின் அடையாளம் வீடு!